மருத்துவமனையில் யாருமின்றி பரிதவிக்கும் நடிகை நிலானியின் குழந்தைகள்- அதிர்ச்சி வீடியோ உள்ளே

பிரபல திரைப்பட நடிகையான நிலானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெரியவர்கள் யாரும் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகையான நிலானி காந்தி லலித் தன்னை திருமணம் செய்துக்கொள்ள முயற்சி செய்வதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனால் மனமுடைந்த காந்தி லலித் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காந்தி லலித் தற்கொலை செய்து கொண்டதற்கு நிலானி தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் அவரோ நான் அவர் தற்கொலைக்கு காரணமில்லை என்று கூறினார். அதுமட்டுமின்றி காந்தியை திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன்.

ஆனால் காந்தி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி என்னிடம் இருந்து அதிக பணம் வாங்கிகொண்டு செலவு செய்ததால் அவரை விட்டு ஒதுங்கினேன்.

மேலும் நானும் காந்தியும் சேர்ந்திருப்பது போன்ற படங்களை வேண்டுமென்றே சமூகவலைதளங்களில் பரப்புகின்றனர். புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை நிலானி சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து காந்தியின் சகோதரர் ரகுகுமார் தன்னுடைய தம்பியின் மரணத்திற்கு நிலானி தான் காரணம், அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், தற்போது தான் நிலானி பற்றி ஒவ்வொரு உண்மைகளை வெளி கொண்டு வருகிறோம்.

அவருக்கு பல ஆண்களிடம் தொடர்பு இருக்கிறது. விரைவில் இது குறித்த ஆதாரத்தை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

ரகுகுமார் கூறியதை அடுத்து நிலானி மீதான குற்றச்சாட்டு அம்பலமானதால், வளசரவாக்கம் வீட்டில், கொசு விரட்ட பயன்படுத்தும் குட் நைட் மருந்து குடித்து நிலானி தற்கொலை முயற்சித்துள்ளார்.

மருந்தை குடித்ததும் மயக்கமான தனது இரண்டு குழந்தைகளும் கண்ணீர் விட்டு பரிதாபமாக கதறி அழுதுள்ளனர். குழந்தைகளின் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நடிகை நிலாணியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]