மருத்துவக் கழிவுகள் விவகாரம்: இராஜதந்திர மட்டத்தில் விசாரணை தேவை என்கிறார் அமைச்சர் சம்பிக

இந்திய மருத்துவக் கழிவுகள் புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய விடயம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் பாட்டாலி சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட அவர், குறித்த விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அனைத்து நாடுகளும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு ஒரு முறையான செயற்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]