மரண வீட்டுக்குச் சென்று திரும்பிய முன்னாள் கிராம சேவகர் வீதி விபத்தில் பலி

முன்னாள் கிராம சேவகர்

மரண வீட்டுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் கிராம சேவகர் வீதி விபத்தில் பலி, கன்ரெர் வாகன சாரதி கைது

ப் பொலிஸ் பிரிவு கதிரவெளியில் திங்கட்கிழமை இரவு 26.02.2018 இடம்பெற்ற வீதி விபத்தில் ஓய்வு பெற்ற கிராம சேவகர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிரவெளி – புச்சாக்கேணி எல்லைக்குச் சமீபமாக பால்பண்ணைக்கு அருகில் இடம்பெற்ற இவ்விபத்தில் கதிரவெளியை வசிப்பிடமாகக் கொண்ட குழந்தைவேல் சிங்காரவேல் (வயது 68) எனும் ஒன்பது பிள்ளைகளின் தந்தையே பலியாகியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் கன்ரெர் ரக வாகன சாரதியைக் கைது செய்து விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, கதிரவெளியில் தனது உறவினர் ஒருவரின் மரண வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறிவிட்டுத் திங்கட்கிழமை இரவு 7.50 மணியளவில் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார்.

அந்நேரம் கதிரவெளியிலிருந்து வாகரைப் பக்கமாக கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்து கொண்டிருந்த கன்ரெர் ரக வாகனம் முன்னாள் கிராம சேவகர் மீது மோதியதில் அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

பலியான முன்னாள் கிராம சேவகரின் சடலம் உடற் கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]