மரண வீட்டிற்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்- ஒருவர் பலி

இரத்தினபுரியில் உள்ள மரண வீடு ஒன்றிற்கு சென்று மீண்டும் மதுகம நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விதானகே தொன் பியதாஸ (வயது 63) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த விபத்தின் போது வேனில் நால்வர் இருந்ததுடன் வாகன ஓட்டுனர் உட்பட காயமடைந்தவர்கள் வெத்தேவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெத்தெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]