முகப்பு News Local News ‘மரண தண்டனை நிச்சயம்’

‘மரண தண்டனை நிச்சயம்’

போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனையை பெற்றுக்கொடுக்க தாம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீனா – இலங்கை நட்புறவுடன் அமைக்கப்படும் சிறுநீரக வைத்தியசாலையில் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அரசாங்கம் நிறுத்த உள்ளதாக வாராந்த பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ள செய்தி பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com