முகப்பு News மரண தண்டனை கைதிகள் 247 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி??

மரண தண்டனை கைதிகள் 247 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி??

இலங்கையில் 247 மரண தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக நீதித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மரண தண்ட னையை நடைமுறைப் படுத்துவது குறித்து நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது.

இதில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அதனை அமல்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இலங்கை அமைச்சரவையில் கடந்த வாரம் தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது.

இலங்கை சிறைச்சாலை களில் தற்போது 373 தூக்குத் தண்டனை கைதிகள் உள்ளனர். இதில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 18 பேர்களை தூக்கிலிட இலங்கை சிறைத்துறை சார்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தூக்கிலிடும் பணிக்கு ஆள் நியமனம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், இலங்கை நீதித்துறை அமைச்சகத்தின் சார்பாக புதன்கிழமை நீதித்துறை செயல்பாடுகள் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில் அதிபர் சிறிசேனா இலங்கை சிறைகளில் உள்ள 247 மரண தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

11.12.2015 முதல் 4.2.2017 திகதி வரையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் கோரிக்கையை ஏற்று மரண தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் நன்னடத்தைகளின் அடிப்படையில் தண்டனை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கி உள்ளது

இவ்வாறு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com