யாழில் மரக்கறி வகைகளின் விலைகள் நான்கு மடங்குகளாக அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் உள்ளூர் மரக்கறிகளின் உற்பத்தி பாதிப்படைந்துள்ளமையால் மரக்கறி வகைகளின் விலை நான்கு மடங்குகளாக அதிகரித்து காணப்படுகின்றன சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.மரக்கறி வகைகளின்

முன்னர் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் தக்காளி தற்போது 160 ரூபாயாகவும் 30 ரூபாயக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் தற்போது 140 ரூபாயாகவும் காணப்படுகிறது.
ஒரு கிலோகிராம் பயற்றங்காய் 200 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் கறி மிளகாய் 140 ரூபாயாகவும், ஒரு கிலோ கிராம் லீக்ஸ் 200 ரூபாயாகவும் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 160 ரூபாயாகவும், வெங்காயம் ஒரு கிலோ கிராம் 120 ரூபாய் ஆகவும், ஒரு கிலோ கிராம் முருங்கைக்காய் 650 ரூபாய் ஆகவும், கோவா 100 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் போஞ்சி தற்போது 200 ரூபாயாகவும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட் 120 ரூபாயாகவும் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் பீற்றூட் தற்போது 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மற்றைய மரக்கறிகளின் விலையும் அதிகமாகவே காணப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]