மரக்கறிகளின் விலை வெகுவாக குறைப்பு

மரக்கறிகளின் விலை வெகுவாக குறைப்பு

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று(வியாழக்கிழமை) ஒரு கிலோகிராம் தக்காளி 10 முதல் 15 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது.

சந்தைக்கு வரும் மரக்கறிகள் அதிகரித்துள்ளமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாளாந்தம் 50 தொன் மரக்கறி வீண்விரயமாகுவதாக வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், மேலதிக மரக்கறிகள் யானைகளுக்கு வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]