மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்

மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும்

மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால், அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், சுமார் 60 வீத மரக்கறிகள் மழையினால் அழிவடைந்துள்ளதாகவும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

எனவே எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகின்றது.

அதன்படி தக்காளி, கறிமிளகாய், லீக்ஸ் உள்ளிட்ட சில மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]