மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம் எனும் நிகழ்வு யாழில்

மரக்கன்றை நடுவோம்

மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம் எனும் நிகழ்வு யாழில்

மரக்கன்றை நடுவோம் யுகத்தை ஆரம்பிப்போம் எனும் தொனிப்பொருளில் இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை யாழ் கோட்டையை அண்மித்த பண்ணை கடற்கரை பூங்கா வளாகத்தில் இடம்பெற்றது.

வடமாகாண ஆளனர் செயலகம் வடமாகாண விவசாய அமைச்சு மற்றும் யாழ் மாநகரசபை ஆகியன இணைந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளது

வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றம் வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி இந்த செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

யாழ் மாவட்ட இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன், இந்த செயற்றிட்டத்தினூடாக யாழ் மாநகர எல்லைக்கட்பட்ட பகுதிகளில் சுமார் நான்காயிரம் மரக்கன்றுகளை இவ்வாரத்தில் நாட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், சுகாதார அமைச்சர் குணசீலன், இந்திய உதவி உயர்ஸ்தானிகர் பாலச்சந்திரன், வடமாகாண எதிர் கட்சி தலைவர் சி.தவராசா, ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மரக்கன்றை நடுவோம் மரக்கன்றை நடுவோம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]