முகப்பு News Local News மயிலிட்டி மகாவித்தியாலயத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை

மயிலிட்டி மகாவித்தியாலயத்தினை இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க நடவடிக்கை

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மயிலிட்டி மகாவித்தியாலயத்தினை எதிர்வரும் இரு வாரங்களில் விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

மயிலிட்டி துறைமுக புனரமைப்பு மற்றும் அதன் செயற்பாட்டினை ஆரம்பிக்கும் நிகழ்வில் நேற்று மயிலிட்டி துறைமுகப் பகுதியில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே இவ்வாறு உறுதியளித்தார்.

முயிலிட்டி பகுதியில் உள்ள பல பாடசாலைகள் இன்னும் இராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா உட்பட விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினார்கள்.

ஆதன்அடிப்படையில் உடனடியாக யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராட்சியிடம் பாடசாலைகளை விடுவிப்புத தொடர்பாக இந்த நிகழ்வில் ஆராய்ந்துள்ளேன்.

ஆதனடிப்படையில் எதிர்வரும் இரு வாரங்களில் மயிலிட்டி மகாவித்தியாலயத்தினை விடுவிப்பேன் என்று உறுதியளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com