மயிலிட்டி பகுதி காணிகளை மக்களிடம் கையளிப்பு – யாழ். மக்கள் மகிழ்ச்சியில்

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கடந்த 27 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணிகளை யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ்.மாவட்ட செயலாளர் என்.வேதநாயகனிடம் இன்று காலை உத்தியோகபூர்வமான கையளித்துள்ளார்.

காணி கையளிப்பு நிகழ்வு மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலய வளாகத்தில் நடைபெற்றது.

இதன்படி மக்கள், 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் மற்றும் மயிலிட்டி கண்ணகை அம்மன் கோவில் போன்றவற்றை ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.

மேலும், 27 வருடங்களுக்கு பின் மயிலிட்டி துறைமுகத்தில் மக்களின் படகுகள் வந்து சேர்ந்துள்ளமையால், மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்  மயிலிட்டி பகுதி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]