மயிலிட்டி துறைமுகத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

மயிலிட்டி துறைமுகம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மயிலிட்டி துறைமுகத்தை புனரமைத்து மீண்டும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, குறித்த துறைமுகத்தை புனரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும் காணியமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த யோசனையை முன்வைத்திருந்தார்.

யாழ்ப்பாணம், வலிகாமம் பிரதேசத்தில் உள்ள மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம், 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் கடற்றெழில் துறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.

அது மாத்திரமன்றி தென்கிழக்கு பருவ பெயர்ச்சி காலப்பகுதியிலும் இத்துறைமுகத்தை பயன்படுத்தகூடியது இதன் சிறப்பாகும்.

மோதல்கள் நிலவிய காப்பகுதியில் இதன் செயற்பாடுகள் முடங்கியிருந்தன. வடக்கு அமைதி நிலை மீண்டும் திரும்பியதையடுத்து 2017 ஜுலை மாதத்தில் இந்த துறைமுகமும் 54 ஏக்கர் காணியையும் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் விடுவித்தது.

அதனையடுத்து, இந்த பிரதேசத்தில் இடம் பெயர்ந்த மக்கள் மீண்டும் குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]