மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீ

வலிகாமம் மயிலிட்டி துறைமுகத்திற்கு அண்மையில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலில் தீ பரவியுள்ளது. கப்பலின் இயந்திரத்தின் பகுதியில் தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்று திங்கட்கிழமை (18) அதிகாலை ஒரு மணியளவில் இந்த தீ பிடித்துள்ளது.

கப்பலில் தீ பிடிப்பதைக் கண்ட கடற்படையினர் கண்டு மாலுமிக்கு அறிவித்துள்ளனர். பின்னர் தீயினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர். இருந்தும் தீயினைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றது.

யாழ்.மாநகர சபையின் தீ அணைப்பு படையினருக்கு அழைப்பு விடுத்த போதிலும் மாநகர சபை தீ அணைப்பு படையினர் சென்றுள்ளதுடன் தீ அணைப்பு கருவி அங்கு கொண்டு செல்லப்படவில்லை. கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்துள்ள காரணத்தினால் அங்கு யாழ்.மாநகர சபையின் தீ அணைப்பு கருவி கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனால் கப்பலின் தீயினைக் கட்டுப்படுத்த முடியாமல் கடற்படையினர் பெரும் சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளனர். இயந்திரத்தில் தீ பரவியிருப்பதனால் கப்பலுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கப்பல் மாலுமி சந்தேகம் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]