‘மயிலிட்டிப் பகுதி’யில் ஆயுதங்கள் மீட்பு

மயிலிட்டிப் பகுதி

யாழ்ப்பாணம்; ‘மயிலிட்டிப் பகுதி’யில் உள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று (18) மாலை வீட்டு உரிமையாளர்கள் வீட்டினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது, தண்ணீர்த் தொட்டிக்குள் பழைய ஆயுதங்கள் இருந்துள்ளன.

வீட்டு உரிமையாளர்கள் பலாலி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம், பலாலி இராணுவத்தினர் சென்று கண்ணிவெடிகள் மற்றும் பழைய ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

மயிலிட்டிப் பகுதி மயிலிட்டிப் பகுதி

இராணுவத்தின் பாவணையில் இருந்த பகுதியில் அண்மையில் பொது மக்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிலையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறான அநாமதேய வெடிபொருட்கள் இருப்பதை பொது மக்கள் அவதானித்தால், அவற்றினைக் கையால் தொடாமல் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இராணுவ முகாம்களிற்கு அறிவக்குமாறும், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பொது மக்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]