மயிரிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகை ரோஜா..!

நடிகை ரோஜா திருப்பதியில் இருந்து ஹைதராபாத் செல்ல அண்மையில் விமானத்தில் பயணித்திருக்கிறார்.

அதாவது நேற்று இரவு 8.55 மணிக்கு கிளம்பிய அவரது விமானம் ஹைதராபாத்தில் 10.25 மணிக்கு தரையிரங்கியுள்ளது.

தரையிரங்கும் போது திடீரென்று விமானத்தின் ஒரு டயர் வெடித்து தீ ஏற்பட்டுள்ளது.

உடனே அவசர உதவியாளர்கள் வந்து விமானத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
அதேபோல் அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நடிகை ரோஜாவுக்கும் எதுவும் ஆகவில்லையாம், தற்போது அவர் பத்திரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]