‘மயக்கம் என்ன’ நாயகிக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாம்! இவர் தான் மாப்பிள்ளை!

‘மயக்கம் என்ன’, ஒஸ்தி ஆகிய படங்களில் நடித்தவர் ரிச்சா காங்கோபாதியாய். இவர் ரிச்சா காங்கோபாதியாய்.

இவர் 2007ம் ஆண்டில் மிஸ் இண்டியா இன் அமெரிக்கா அழகி போட்டியில் டைட்டில் வென்றவர். தெலுங்கில் வெளியான லீடர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

தமிழிலில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் ஒரு சில படங்கள் நடித்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக நடிக்கவில்லை. எம்பிஏ படித்துள்ள ரிச்சா, பிசினஸ் ஸ்கூல் ஒன்றில் பெரிய பொறுப்பில் உள்ளார்.

இவர் வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

ரிச்சா தனது காதலர் ஜோவுடன் இருக்கும் படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும்  “ஜோவை நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு பிசினஸ் ஸ்கூலில் சந்தித்தேன். இருவரும் காதலித்தோம். இப்போது நிச்சயதார்த்தம் முடிந்திருக்கிறது. எனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு செல்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]