மம்முட்டியுடன் இணையும் பிரபல தமிழ் ஹீரோ!

மம்முட்டியுடன் இணையும் பிரபல தமிழ் ஹீரோ!

பிரபல மலையாள இயக்குனர் அல்பொன்ஸ் புத்திரன் இயக்கிய ‘பிரேமம்’ கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சென்னையில் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. மேலும் இந்த படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அல்பொன்ஸ் புத்திரனின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இவரது அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும் ஒருவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி என்றும் இன்னொருவர் கொலிவுட்டில் பிரபலமான ஹீரோ என்றும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட  பல கொலிவுட் பிரபலங்களுடன் நடித்துள்ள மம்முட்டி, இம்முறை யாருடன் இணையவுள்ளார் என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்,.