மம்முட்டியின் மருமகளாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்

‘யாத்ரா’ என்ற படத்தில் நடிகர் மம்முட்டியின் மருமகளாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடித்து வந்த ‘நடிகையர் திலகம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. அடுத்ததாக ‘தளபதி 62’, ‘சாமி 2’, ‘சண்டக்கோழி 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஒய்.எஸ்.ஆரின் மருமகளாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் -அதாவது ஜகன் மோகன் ரெட்டியின் மனைவியான ஒய்.எஸ்.பாரதி வேடத்தில் தான் அவர் நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ‘யாத்ரா’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ராஜசேகர ரெட்டியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]