மன்மோகன்சிங்கின் வாழ்க்கை படமாகிறது

சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பது வழக்கமான விடயம்.

Manmohan Singh

ஏற்கனவே காந்தி , அம்பேத்கர், இந்திராகாந்தி, பகத்சிங், தெண்டுல்கர், டோனி உள்பட பலருடைய வாழ்க்கை வரலாறு இந்தியில் படமாகி திரைக்கு வந்திருக்கிறது.

அந்த வரிசையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Manmohan Singh

இந்த படத்துக்கு ‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என்று பெயர் வைத்துள்ளனர்.

மன்மோகன்சிங் தற்செயலாக பிரதமர் ஆனதை குறிப்பிடும் வகையிலே  இந்த தலைப்பை இட்டுள்ளனர்.

Manmohan Singh

மன்மோகன்சிங் வேடத்தில் அனுபம்கெர் நடிப்பதாகவும், சுனில்போஹ்ரா தயாரிப்பதாகவும், விஜய் ரத்னாகர் குட்டே இயக்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

10 வருடங்கள் சிறந்த பிரதமராக இந்திய நாட்டை ஆண்ட மன்மோகன்சிங்கின் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள், நடந்த நிகழ்வுகள் ஆகியவை இந்த படத்தில் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]