மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்த நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கும் மாவட்டத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.

 

மன்னார்

குறித்த விசேட கலந்துறையாடலில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள், கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டதோடு, மன்னார் மாவட்டத்தின் பிரதேசச் செயலாளர்கள் உற்பட ஏனைய திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

மன்னார்

மன்னார்

இதன் போது தலைமன்னார் தொடக்கம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மறிச்சிக்கட்டி வரையும், விடத்தல் தீவு தொடக்கம் மடு வரைக்கும் மன்னார் மாவட்டத்தில் இருக்கின்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிவதற்கு ஏற்ற வகையில் அபிவிருத்திகளை மேற்கொள்ளுவதற்கும், குறிப்பாக மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினர் தங்குவதற்கு சுமார் 400 அறைகளை உள்ளடக்கிய திட்டங்களை மேற்கொள்ளுவதற்கும் திட்டமிடப்பட்டது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]