மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது 112 ஆவது நாளாக இன்று (06) சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்றது.

இதுவரை மன்னார் மனித புதைகுழி தொடர்பான பல ஊகங்களை உண்மையாக்கும் வகையில் இன்று மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதிலுள்ள மனித எச்சங்கள், இரண்டு கால்களும் இரும்பு கம்பியால் இறுகக் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுவரை நாட்களும் மனிதப் புதைகுழி தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் காணப்பட்ட போதும் குறித்த மனித புதைகுழியில் காணப்படும் மனித எலும்புக்கூடுகள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளாக இருக்கலாம் என காணமற்போன உறவுகளின் பெற்றோர் அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று கண்டு பிடிக்கப்பட்ட இரும்பு கம்பியால் கட்டப்பட்ட மனித எச்சம் மேலும் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. அத்துடன் இந்த வாரத்தில் மனித புதைகுழியில் இருந்து பெண் ஒருவரின் மோதிரம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டது.

தொடர்ச்சியாக சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுவருகின்றன.

இதுவரை மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து 256 முழு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் 250 மனித எச்சங்கள் அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]