மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை முதல் ஆரம்பம்

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாக, அகழ்வு பணிகளை கண்காணிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

பலத்த மழை, அரச பணி மற்றும் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ வெளிநாடு சென்றமை போன்ற காரணங்களினால் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிரு்தது.

இந்நிலையிலேயே இந்த அகழ்வு பணி நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுவரை இடம்பெற்ற அகழ்வு பணியில் 239 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டும், 230 எலும்புக்கூடுகள் அகழ்ந்தும் எடுக்கப்பட்டன.

இதேவேளை, குறித்த மனித புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் B232/18 கீழ் நாளை விசாரணைக்கு உட்படுத்தப்பட இருக்கின்றது.

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் கடந்த மார்ச் மாதம் கட்டட நிர்மாணப் பணிகளுக்காக நிலம் தோண்டியபோது, இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த பணிகளில் மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட சட்ட வைத்திய அதிகாரிகள் குழு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]