மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பல சிரம்மங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

காலை 8 மணிமுதல் வைத்தியர்கள் ஒருநாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், வைத்தியசாலைக்கு வரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது இன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதனை கண்டிது இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கர்ப்பிணி தாயொருவர் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவித்துள்ளார். எனினும் குறித்த குழந்தை மருத்துவ காரணங்களினால் இறந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை வைத்தியசாலைக்கு வந்த குறித்த பெண்ணின் கணவரும் உறவினர் ஒருவரும் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்திய அதிகாரியை தாக்கியதுடன், பாதுகாப்பு உத்தியோகத்தரையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இருவரையும் மன்னார் பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மன்னார் பொது வைத்தியசாலையின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]