மன்னார் பெரியமடு பகுதியில் கண்ணிவெடி அகற்றல் பணிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள்

மன்னார் பெரியமடு பகுதியில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றல் பணிகளில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் இன்று பங்குபற்றியிருந்தனர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிகெட் அணி ஒருநாள், ரி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணியின் வீரர்கள் பலர் இன்று மன்னார் பெரிய மடுப்பகுதிக்கு வருகை தந்தனர். அவர்கள் மக் தொண்டு நிறுவனத்தால் பெரியமடுப் பகுதியில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடி அகற்றல் பணிகளில் இணைந்து கண்ணிவெடி அகற்றும் பணிகளில் தாமும் முன்னெடுத்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]