மன்னார் பகுதியில் 2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

நேற்று மன்னார் பகுதியில் 2.1 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

இவர் மன்னார் பகுதியில் வசித்து வந்தவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]