மன்னார் சதோச வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது

மன்னார் சதோச வளாகத்தில் மனித எச்சங்களை தேடி முன்னெடுக்கப்படும் அகழ்வு நடவடிக்கைகள், 58ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றன.

குறித்த அகழ்வு பணி கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலுடன் நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மீண்டும் விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்று வருகின்றன.

மன்னார் சதோச

அந்தவகையில் குறித்த வளாகத்தில் இதுவரை 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 95 மனித எச்சங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுமார் 440க்கும் மேற்பட்ட பைகளில் இலக்கம் இடப்பட்டு, பொதி செய்யப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தொடர்ச்சியாக அப்புறப்படுத்தப்படும் மனித எச்சங்கள், குறித்த வளாகத்திலேயே அடையாளப்படுத்தப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது.

தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதால், வளாகத்தின் முன்பகுதி முழுவதும் தரப்பால் இடப்பட்டு மூடப்பட்டுள்ளது. ஆகையால் தற்போது வளாகத்தின் மைய பகுதியிலுள்ள மனித எச்சங்கள் மாத்திரமே மீட்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]