மன்னாரில் வறட்சி காரணமாக அதிக குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதன் காரணமாக இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அதில், மன்னார் மாவட்டத்தில் அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 29,832 குடும்பங்கள் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியி;ட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் 13இ566 குடும்பங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வடக்கில் உள்ள பல பகுதிகளில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.