மன்னாரில் சில பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்தமையால் பதற்றத்தில் மக்கள்

மன்னார் மாவட்டத்தின் கடற்கரையை அருகில் உள்ள கிராமங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்தவண்ணம் உள்ளது பெரிய வாய்க்கால் மூலம் கடலுக்குள் கழிவு நீரினை அகற்றுவதற்கா அமைக்கப்பட்ட வாய்க்கால் மூலமே வாய்க்கால் நிரம்பிய நிலையிலே கடல் நீரானது மீண்டும் கிராமத்திற்குள் புகுந்துள்ளமையால் மக்கள் அவதிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர்.

ஜிம்றோன் நகர்
ஜீவபுரம்
பனங்கட்டுகொட்டு
சாந்திபுரம்
ஸ்ரேசன்

எமில்நகர் பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வற்றாத நிலையில் கடல் நீரின் உட்புகுதலும் மக்களின் பயத்திற்கு காரணமாகின்றது.

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வீசுகின்ற பலத்த காற்றின் மூலம் கடல் நீர்மட்டம் உயர்ந்து ஊருக்குள் வரத்தொடங்கியுள்ளது கடந்த இரண்டு நாட்களாக இவ்வனர்த்தம் நிகழ்கின்றபோதும் எந்த விதமான தடுப்புநடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.

மன்னாரில் மன்னாரில் மன்னாரில் மன்னாரில்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]