மன்னாரில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

மன்னாரில் ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

மன்னாரில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர்.

மன்னார்- முருங்கன், கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியிலுள்ள கிணற்றினுள் இருந்தே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த ஒரு தொகுதி வெடி பொருட்களை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, ‘குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார்.

அதன் போது அக்காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் வேளையில் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார், கிணற்றுக்குள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

தொடர்ந்து அவ்விடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியதோடு, மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு இச்சம்பவத்தை கொண்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்று மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியுடன், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கிணற்றினுள் கிடந்த அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]