மனோஜ் சிறிசேன அமைச்சராக பதவியேற்பு

தென்மாகாண சபை

தென்மாகாண சபையின் புதிய அமைச்சராக மனோஜ் சிறிசேன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளார்.

தென் மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரம், கலாச்சாரம், கலை, சமூக நலம், பெண்கள் விவகாரம், உள்நாட்டு பொருளாதாரம், வீட்டுவசதி, கட்டுமானம், மனிதவளத்துறை, வேலைவாய்ப்பு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார்.

இந்நிகழ்வில், தென்மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா, ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார ஆகியோர் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]