மனைவி ஏமாற்றியதால் 11 பெண்களை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தேன் – கொலையாளியின் வாக்குமூலம்

மனைவி ஏமாற்றியதால் 11 பெண்களை கொலை செய்த கொலைக்காரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பெண்களை கொலை செய்வேன் என பொலிசாரிடம் கூறியுள்ளார்.

குறித்த நபர் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இடங்களுக்கு மாறி மாறி பயணம் செய்து பெண்களை ஏமாற்றி அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ளார்.

3 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டபோதுதான் இவர் இதற்குமுன்னர் 11 பெண்களை கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.

Yulia Lebezhina என்ற 26 வயது இளம்பெண்ணை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். மேலும் இவர் பெண்களை கொலை செய்வதற்கு முன்னர் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் 77 வயதான பெண்மணியும் அடங்குவார்.

இவரை பொலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என்னை கைது செய்தாலும் பெண்களை கொலை செய்வதை நிறுத்தமாட்டேன். எனக்கு சிறுவயதில் இருந்தே பெண்கள் மீது வெறுப்பு அதிகம்.

நான் திருமணம் செய்தபெண் என்னை ஏமாற்றிவிட்டாள், இதனால் அதிக பாதிப்படைந்த நான் இனி பெண்களை கொலை செய்வது மட்டும்தான் என நோக்கமாக கொண்டேன் என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]