மனைவியை விபசாரத்துக்காக விற்பனை செய்த கணவன் கைது

மனைவியை விபசாரத்துக்காக விற்பனை செய்த கணவன் கைது

விபசாரத்துக்காக

மனைவியை விபசாரத்துக்காக விற்பனை செய்த கணவனை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். மனைவியின் முறைப்பாட்டின் அடிப்படையில் தைதான அவரை நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

கொழும்பில் வேலை பெற்றுத் தருவதாக அழைத்துச் சென்ற கணவன், அங்கு பெண் ஒருவரிடம் தன்னை கையளித்ததாகவும் பின்னர் பல மைல்களுக்கு அப்பால் உள்ள பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள உள்ள ஆடம்பர வீடொன்றில் பணியாற்றியதாகவும் பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

ஒரு மாதங்கள் அந்த வீட்டில் பணியாற்றியதாகவும் பின்னர் தமக்குச் சொந்தமான விடுதி ஒன்றில் பணியாற்றவேண்டும் எனக்கூறி, வீட்டின் பெண் உரிமையாளர் அழைத்துச் சென்றதாகவும் அங்குவந்த இளைஞர்கள் சிலர் தன்மீது குற்றம் புரிய முற்பட்டபோது தான் அதற்கு உட்படவில்லையென்றும். இதனால் விடுதி உரிமையாளரான குறித்த பெண் தன்னை தாக்கியதாகவும் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

எனினும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அங்கு வந்து சென்ற இளைஞர்களின் தேவைக்கு தான் உடன்பட்டதாகவும் பெருமளவு பணத்தை அந்த விடுதியின் பெண்உரிமையாளர் பெற்றுக் கொண்டதை தான் நேரில் கண்டதாகவும் மனைவி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு பணியாற்றிய ஒருவரின் உதவியுடன் தப்பிச் சென்று கணவனுக்கு தொலைபேசி மூலம் அறிவித்ததாகவும் ஆனால் கணவன் தன்னை ஏசியதாகவும் மனைவி கவலையுடன் கூறினார். அதன் பின்னரே பொலிஸாரிடம் முறையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]