மனைவியை படுகொலை செய்த கணவன் கைது

ஊருபொக்க பிரதேசத்தில் பெண்ணொருவர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த பெண்ணொருவர் நேற்று இரவு இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மனைவியின் கள்ளத்தொடர்பு தெரியவந்ததால் கோபமுற்ற கணவர் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

27 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மாத்தறை மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுகின்றது.