மனைவியை பக்கத்து வீட்டு நபருடன் தொடர்புபடுத்தி பேசிய கணவன் வெட்டி கொலை

தனது மனைவியை பக்கத்து வீட்டில் உள்ள நபருடன் தொடர்புபடுத்தி பேசியதால் கணவன்  வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

கன்னியாகுமரி மாட்டத்தை சேர்ந்தவர்கள்  ராஜ்- சுலோக்சனா தம்பதிகள். ராஜ் சுலோக்சனா மீது சந்தேகம் ஏற்பட்டு பக்கத்து வீட்டாருடன் தொடர்பு படுத்தி பேசி வந்துள்ளார், இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை  நடந்துள்ளமு.

இதனை அடுத்து சுலோக்சனா காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ராஜ் பக்கத்து வீட்டுகாரர் ஜெயசிங் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயசிங் மற்றும் அவரது உறவினர்கள் நள்ளிரவில் ராஜ் உறங்கும் வேளையில் வீடு புகுந்து அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாகி உள்ள குற்றவாளிகளை பொலிசார் தேடிவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]