மனைவியை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கணவன்- களுத்துறை பகுதியில் சம்பவம்

களுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்துள்ளார்.

குறித்த நபருக்கு மதுபாவனை பழக்கமும் காணப்படுகின்றது.. வழமையை போன்று அன்றைய தினமும் அவர் குடித்து விட்டுதான் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டுக்கு சென்றுள்ளார்.வீட்டின் கதவை மனைவி திறந்து விட்டதும் உள்ளே சென்றவர் உனக்கு கதவை திறக்க இவ்வளவு நேரமா என வீண் வாய்தர்க்கம் செய்துள்ளார்.

இருவருக்கும் வாய்தர்க்கம் அதிகரித்துள்ளது. கணவர் மனைவியை தாக்க மனைவியும் சமாளித்து வீட்டினுள் அங்குமிங்கும் ஓடித்திரிந்துள்ளார்.கணவர் மது போதையில் இருந்தமையினால் மேலும் கோபம் அதிகரித்துள்ளது.

மனைவி மீது தனது முழு பலம் கொண்டு தாக்கிய போது மனைவி மயக்கமுற்று நிலத்தில் சரிந்தாள்.

காற்சட்டைக்கு அணியும் பட்டியால் தொடர்ந்து தாக்கியமையால் விழித்துக்கொண்ட மனைவி கணவரிடம் கெஞ்சியுள்ளார்.

தன்னை விட்டுவிடும்படி கெஞ்சியும் தொடர்ந்து தாக்கிய கணவர் சிறிது நேரத்தில் மனைவியை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளார்.

உடம்பில் காயங்களுடன் செய்வதறியாது தடுமாறிக்கொண்டிருந்த மனைவிக்கு சிறிய இடைவேளை கொடுப்பது போன்று சிறிது நேரம் சென்றதும் வேகமாக எழுந்த குறித்த நபர் சமையல் அறைக்கு சென்றுள்ளார்.

சமையல் அறையில் காணப்பட்ட மிளகாய் தூளினை கொண்டு வந்து மனைவியின் பெண் உறுப்பில் வீசி சித்திரவதை செய்துள்ளார்.

பின்னர் நிர்வாணமாக காணப்பட்ட மனைவியை குளியறைக்குள் இழுத்து சென்று அசுத்தமான நீரையும் அவர் உடம்பின் மீது ஊற்றியதுடன் அதனை பருகுமாறு துன்புறுத்தியுள்ளார்.

மயங்கிய மனைவி மறுதினம் அதிகாலை விழித்துக்கொண்டதும் பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர்.

இதற்கமைய குறித்த வழக்கு மீதான விசாரணைகளை களுத்துறை மேல் நீதிமன்றம் விசாரணை செய்ததை தொடர்ந்து இன்றைய தினம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

5 ஆயிரம் அபராதமும் இரண்டு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]