மனைவியை கொலை செய்து கழிவறையில் வீசிய கணவன்

கொலை

தனது மனைவியை கொலை செய்த நபரொருவர் சடலத்தை கழிவறைக் குழியில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹம்பேகமுவ – கன்டியபிட பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் 23 வயதான கொடவேஹெரமங்கட பகுதியைச் சேர்ந்த பெண்ணே பலியாகியுள்ளார்.

இதேவேளை, சடலத்தை மறைத்து வைத்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]