மனைவியுடன் பிரச்சனை – தந்தையால் பலியான இரு மகள்கள்?

இந்தியாவில் கணவன் மனைவி பிரச்சனையில் இரு பிள்ளைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பகுதியை சேர்ந்தவர்கள் பத்மநாபன் – செல்வராணி தம்பதியினர். இவர்களுக்கு ஹேமவர்ஷினி (15) ஸ்ரீஜா (10) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுக்கு இடையில் நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்த நிலையில் நேற்றிரவு பிரச்சனை பொலிஸார் வரை சென்றது. இவர்களிடையில் பொலிஸார் பேசி சமரசம் செய்துள்ளனர்.

இதன் பிறகு செல்வராணி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.  கணவர் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர். காலை செல்வராணி வீடு திரும்பிய போது இரண்டு பெண் குழந்தைகளும் வீட்டிற்குள் இறந்து கிடந்தனர்.

தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குழந்தைகளின் தந்தை தலைமறைவாகியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]