மனைவியுடன் ஊடலா??? எப்படி கூடலாம்…??

நாம் அனைவரும் துணையுடன் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமாக இருப்பது இல்லை. உறவுகளில் சில சண்டைகள் வருவது சாதாரணம் தான். இது போன்ற சண்டைகளின் போது உங்கள் துணையை சமாதானம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மனைவியுடன்

நேரம் கொடுங்கள்

ஒரு சண்டையின் போது இருவரின் மன நிலையும் சரியாக இருக்காது. கோபம் மறைந்து இயல்பு நிலைக்கு வர ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்படும். அதுவரை அமைதியாக இருக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் விரைவாக சமாதானமாகிவிடலாம். ஆனால் உங்கள் காதலி நிறைய நேரம் எடுத்து கொள்ளலாம். ஏனென்றால் இருவரது மனநிலையும் வேறு.

மனைவியுடன்

கெஞ்சுவதை தவிர்க்கவும்

சண்டைக்கு பிறகு மன்னிப்பு கேட்பது சரியானது. ஆனால் மன்னித்து விடு, உனக்கு என்ன வேண்டுமோ அதை செய்வேன். சத்தியமாக இது மாதிரி தவறை செய்ய மாட்டேன் என்று சொன்னால் அவருக்கு கோபம் தான் வரும். எனவே, ” நான் செய்த தவறுக்கு வருந்துகிறேன், என் மீதுள்ள தவறை பற்றி யோசிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக நினைக்கிறேன். நான் செய்த தவறு உன்னை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்கிறேன். இனி மேல் இது போன்ற பிரச்சனைகள் வரும் போது அதை வேறு விதமாக எதிர்கொள்வேன் என்று கூறுவது அவருக்கு உங்கள் மீது உள்ள கோபத்தை போக்குவதாக அமையும்.

மனைவியுடன்

அவரது இடத்தில் இருந்து யோசியுங்கள்

அவரது தவறாக நீங்கள் நினைப்பதை, அவரது இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள். எடுத்துக்காட்டாக, அவர் உங்களுக்கு போன் செய்யவில்லை என்றால், அவர் அங்கே எந்த சூழ்நிலையில் இருந்திருப்பார், ஏன் உங்களுக்கு போன் செய்யவில்லை என யோசித்து பாருங்கள்.


அமைதியாக பேசுங்கள்

உங்களது துணையை சமாதனப்படுத்த வேண்டும் என்றால், அமைதியாக பேசுங்கள். தீய சொற்களை உபயோகப்படுத்தாதீர்கள். அவரது மனது புண்படும் படி எதுவும் பேசாதீர்கள்.

மனைவியுடன்

மீண்டும் பழைய பந்ததில் இணையுங்கள்

சண்டை என்பது அனைத்து உறவிலும் இருக்க கூடியது தான். எனவே அந்த சண்டை முடிந்ததும், பிரச்சனையை அதோடு முடித்துக்கொள்ளுங்கள். சண்டையின் போது நிகழ்ந்த கெட்ட அனுபவங்களை மனதில் வைத்துக்கொண்டு இருக்காதீர்கள்.

மனைவியுடன்

பிடித்ததை செய்யுங்கள்

உங்கள் துணையை ரொமெண்டிக் ஆன இடங்களுக்கு அழைத்து செல்லுங்கள். அவருக்கு பிடித்ததை வாங்கி கொடுங்கள். உதாரணமாக அவருக்கு உணவு வகைகளில் விருப்பம் என்றால், ஒரு புதிய ரெஸ்ட்டாரண்டுக்கு அழைத்து செல்லுங்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]