மனைவியின் பிறப்புறுப்பில் மோட்டார் வாகனத்தின் கைப்பிடியை செலுத்திய கொடூர கணவன்..

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. கொடூர எண்ணங்களை கொண்ட சில நபர்களாலும்., கரம் பிடித்த கணவனாலும்., பெற்ற தந்தையாலும்., பெற்றெடுத்த தாயாலும்., உடன் பிறந்த சகோதரனும் பல கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். யாரோ தெரியாத ஒரு காம கொடூரன் பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்தான் என்ற நிலை மாறி., பெண்ணிற்கு தெரிந்த மற்றும் பழகிய நபர்களாலேயே பாலியல் தொல்லைகள் வழங்கப்படும் செய்திகள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்துகிறது.

மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் பகுதியை சார்ந்த நபருக்கும்., அதே பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் தற்போது ஆறு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்., அந்த பெண்ணிற்கு கடுமையான வயிற்று வலியானது தொடர்ந்து ஏற்பட்டு வந்துள்ளது.

சில வாரங்கள் வரை அந்த பெண் வயிற்று வலியை பொறுத்துக்கொண்ட நிலையில்., கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று வயிறு அடிக்கடி வலிப்பதாக கூறியுள்ளார். இவரின் வயிறை ஸ்கேன் செய்ய முடிவு செய்த மருத்துவர்கள்., அவரின் வயிறை ஸ்கேன் செய்த சமயத்தில்., அவரது கருப்பையில் மோட்டார் வாகனத்தின் உடைந்த கைப்பிடியானது சுமார் ஆறு இஞ்ச் அளவில் இருந்துள்ளது.

இதனை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான மருத்துவர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., கருத்து வேறுபாட்டின் காரணமாக கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்., அதனை போன்று ஒரு நாள் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த கணவன்., அவரை அடித்து துன்புறுத்தி., அவரது கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி., அவரது பிறப்புறுப்பில் மோட்டார் வாகனத்தின் கைப்பிடியை செலுத்தியுள்ளார்.

இந்த வலியால் கதறித்துடித்து அலறிய பெண்., இது குறித்து யாரிடமும் கூறாமல் இருந்து வந்த நிலையில்., வயிற்று வலி தாங்க முடியாமல் அரசு மருத்துவமனைக்கு சென்று செய்த சோதனைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தகவலானது வெளிவந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்., இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]