மனைவியின் பிரசவத்திற்காக சொந்த குழந்தையை விற்ற கணவன்

மனைவியின் பிரசவத்திற்காக சொந்த குழந்தையை விற்ற சம்பவம் ஒன்று உத்தரபிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

உடநல குறைவினால் பாதிக்கப்பட்ட குறித்த நபரின் மனைவியை வைத்தியசாலை அனுமதித்த போது, சிகிச்கைக்கு போதிய பணம் இருப்பில் இல்லாதமையினால் குழந்தை விற்று மனைவியை காப்பாற்றியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் பஞ்சாரா சாதாரண கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுக்தேவி. இவர்களுக்கு 4 வயதில் மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர்.

இந்நிலையில் சுக்தேவி மீண்டும் கர்ப்பமான நிலையில், 7 மாத கர்ப்பிணியாக இருந்த சுக்தேவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.  பல தனியார் வைத்தியசாலைகளில் சுக்தேவியை சேர்க்க முயன்ற போதும், கட்டணம் அதிகம் கேட்டதால் கடைசியில் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட போது, சுக்தேவிக்கு ரத்தம் செலுத்த வேண்டும், ரத்தம் செலுத்தினால்தான் உயிர் பிழைப்பாள்என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து ரத்த வங்கிக்கு வந்த அரவிந்த் வைத்தியர்கள் குறிப்பிட்ட ரத்தத்தை கேட்ட போது அதற்கு கட்டணமாக ஆயிரக்கணக்கில் பணம் கேட்டுள்ளனர்.

கையில் பணம் இல்லாததால் தன் மனைவியின் உயிரை காப்பாற்ற தனது 4 வயது மகளை விற்க முடிவு செய்தார். அங்குள்ள நபர் ஒருவரிடம் மகளை விற்று அந்தப் பணத்தின் மூலம் தனது மனைவி சுக்தேவியை காப்பாற்றியுள்ளார்.

இதுபற்றி அரவிந்த் கூறுகையில், மனைவி உயிரை காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை என்ற தெரிவித்துள்ளதை தொடர்ந்து கருத்து தெரிவித்த குறித்த மகளின் தாய், குழந்தையை விற்க மனம் இல்லை. எங்களுக்கு வேறு வழியில்லை, பல வைத்தியசாலைகளுக்கு சென்றும் பணம் இல்லாத காரணத்தால் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]