மனைவியின் கழுத்தை துண்டித்து பூஜை செய்த கணவர் -இரத்தினபுரியில் நடந்த அதிர்ச்சிகரமான செயல்

இரத்தினபுரியில் தனது மனைவியின் கழுத்தை துண்டித்து அதனை பூஜை செய்து மறைத்து வைத்த கணவர் தொடர்பான செய்தி பதிவாகியுள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தனது தாயை கொலை செய்துள்ளதாக மகன் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகன் வழங்கியுள்ள வாக்குமூலத்தில், “தனது தந்தை சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் சில நேரம் அதிக கோபத்துடன் காணப்படுவார். தனக்கு தெய்வ சக்தி உள்ளதாக அடிக்கடி கூறிவருவார்.

இவரை குணப்படுவத்துவதற்காக இந்தியாவரை அழைத்து சென்றிருந்தோம். எனினும் குணமடையாத காரணத்தினால் உள்ளுரிலும் சிகிச்சை வழங்கினோம்.

ஆனால் குடும்பத்திற்கு தோசம் ஏற்பட்டுள்ளதாக அடிக்கடி கூறிவருவார். இதனால் விரக்தியடைந்த அம்மா, நான் எல்லோரையும் விட்டு விட்டு செல்ல போகிறேன் என கூறினார்.

இதனால் கோபமடைந்த அப்பா அம்மாவை கத்தியால் பல முறை வெட்டினார். இதனை தடுக்க சென்ற தங்கையையும் தாக்கினார்.

பின்னர் அம்மாவின் தலையை துண்டித்து விட்டு சடலத்தை வீட்டில் மறைத்து வைத்தார். துண்டித்த தலையை உந்துருளியில் எடுத்து சென்றார்” என மகன் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸார் மோப்ப நாயை பயன்படுத்தி துண்டுடிக்கப்பட்ட தலையை கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான சிறுமி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இதேவேளை, துண்டிக்கபட்ட தலையை எடுத்து சென்று சுத்தப்படுத்தி, அடுத்த ஜென்மத்தில் இதைவிட நல்ல பிறவியாய் பிறப்பாய் என அவர் பூஜை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்ட குறித்த நபர் தனது குடும்பத்துடன் செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நிலையில், மந்திர தந்திரங்களை நம்பி அவர் இந்த காரியத்தை செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]