மனைவியின் அலைபேசியை சோதித்தால் சிறை

மனைவிக்கு தெரியாமல் அவர்களது அலைபேசியை எடுத்து சோதனை செய்யும் கணவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

சவுதி பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது.

பெண்கள் இராணுவத்தில் சேருவதற்கு அனுமதி, திரையரங்குகளின் அனுமதி, கார் ஓட்ட அனுமதிப்பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதற்கு பாராட்டும் மறுபுறத்தில் எதிர்ப்பும் நிலவி வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக மனைவிக்கு தெரியாமல் அவர்களது அலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்று சவுதி அரசு அறிவித்துள்ளது.

இதன்படி மனைவியின் அலைபேசியை எடுத்து பார்ப்பது, கேலரியை பார்ப்பது சமூக வலைதளங்களை சோதனை செய்வது, யாருடன் பேசுகிறார் என்று பார்த்து சண்டையிடுவது போன்ற செயல்கள் எல்லாம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல், 133,000 டொலர் அபராதமாக விதிக்கப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]