முகப்பு News India மனு – இந்திய உயர் நீதிமன்றத்தினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

மனு – இந்திய உயர் நீதிமன்றத்தினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் தரப்பு விரிவான வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கோரிய மனு மீதான விசாரணை இந்திய உயர் நீதிமன்றத்தினால் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு சிறப்பு விசாரணை பிரிவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வரை தனக்கான சிறைத் தண்டனையை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் உயர் நீதிமன்றில் இடைக்கால மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இந்திய உயர் நீதிமன்றில் மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது பேரறிவாளன் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள்,

ராஜீவ் காந்தியை கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கூறப்படும் வெடிகுண்டு பற்றிய விசாரணை அறிக்கையின் நகல் ஒன்றை முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து மத்திய புலனாய்வு பணியகம் உயர்நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த மனுமீதான விரிவான விசாரணைக்கும், தங்கள் தரப்பில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குறித்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com