மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது – ஐ.நா சபையின் விசேட பிரதிநிதி

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது – ஐ.நா சபையின் விசேட பிரதிநிதி.

மனித உரிமை மீறல்கள்

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களின் துன்பங்களை நீக்குவது சிரமமானது, இருந்தும் ஆணைக்குழுக்களை நியமித்து குழுவாக இணைந்து தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

ஓன்றினைந்து செயல் விளைவினை அதிகரித்து சில பாகங்களில் நடந்த அனுபவங்களை வைத்து கொள்கை மூலம் நீதி மற்றும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென ஐ.நா சபையின் விசேட பிரதிநிதி றப்பட்ட பப்லோ டிகிறிப் வலியுறுத்தினார்.

மனித உரிமை மீறல்கள்

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்துரையாடல் செயலணி, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நிலைமாறு கால நீதி தொடர்பான கலந்துரையாடல் யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மனித உரிமை மீறல்கள்

ஐ.நா விடேச பிரதிநிதி கலந்துகொண்டு நிலைமாறு கால நீதி மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.
அதன்பின்னர், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் திறந்த கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். அதன்போது, கலந்துகொண்டவர்களினால் கேள்விகளும் கேட்கப்பட்டன.

மனித உரிமை மீறல்கள்

கேள்விகளுக்கும் பதிலளித்ததுடன், தனது கருத்துக்களையும் முன்வைத்தார். ஆத்துடன், தனது உரையில், பாதிக்கப்பட்ட  மக்களிடையே நம்பகத் தன்மையினை ஏற்படுத்துதல் அவசியமானது. எல்லா சமூகத்திலும் இவ்வாறான பிரச்சினைகள் உள்ளன. இரு சாரார்களின் பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களின் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதன் மூலம் நம்பகத்தன்மையினை ஏற்படுத்த முடியும். 4 விடயங்களின் மூலம் நிலைமாறு கால நீதியினைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும், அதற்கான விளக்கங்களையும் அளித்தார்.

மனித உரிமை மீறல்கள்

அரசாங்கத்திற்கு எவற்றினையும் நிர்ப்பந்திக்க முடியாது. புரிந்துரைகள் மட்டுமே செய்ய முடியும். காணாமல் போனோர்கள் தொடர்பில் நீண்டகாலம் தனது சேவையினை செய்து வருகின்றதாகவும், அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் அரசியல் கைதிகள் இல்லை என கூறுகின்றார்கள். ஒரு சாரார் அரசியல் கைதிகள் உள்ளனர். அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள். எனவே, இரு வகையான முரண்பாடுகளும் உள்ளன. மக்களின் கருத்துக்களை பரிந்துரை செய்ய முடியுமே தவிர, வேறு எவற்றினையும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மனித உரிமை மீறல்கள்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]