மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இராணுவம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன், இராணுவம் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத 49 பேர் கொண்ட இராணுவ அணியொன்று ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு கடந்த பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்தவாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

அதில், ஐ.நா மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை இலங்கை இராணுவம் மீறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து கொழும்பில் நேற்று விளக்கமளித்த இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, “ இராணுவம் இன்னமும் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொள்ளவில்லை. இன்னமும் அது வரைவு நிலையில் தான் இருக்கிறது” என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]