மனிதக் கழிவுகளை பொது வெளிகளில் போடும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடடிக்கைகள் எடுக்கப்படுமென யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.
ஆண்மைக்காலமாக யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட பொது வெளிகளில் மனிதக் கழிவுகள் கொட்டப்பட்டு, துர்நாற்றம் வீசும் நிலமைகள் அதிகரித்து காணப்படுகின்றமையினால், மனிதக் கழிவகற்றல் செயன்முறைகள் தொடர்பில் கேட்டபோதே முதல்வர் இவ்வாறு தெரிவித்தர்.
மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான திட்டம் காக்கைதீவு பகுதியில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிக்குள் அகற்றப்பட வேண்டுமென்று மாநகரசபையினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வாறு மாலை 6 மணிமுதல் அதிகாலை 6 மணிவரையான காலப்பகுதியில் மனிதக் கழிவகற்றும் தாங்கிகள் மற்றும் குடிநீர் தாங்கிகள் வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், காக்கைதீவில் இரவு வேளைகளில் கொண்டு செல்லும் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான பொறுப்புக்களை உடைய ஒருவரை நியமிக்கவில்லை.
இரவு வேளைகளில் சட்டவிரோதமான முறையில் செயற்படுவார்கள் என்ற காரணத்தினால்,இரவு கடமையில் ஈடுபடுத்தவில்லை. இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலைய சுற்றுச் சூழல் பொலிஸாரிடமும் அறிவித்துள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளோம்.
இவ்வாறு மனிதக் கழிவகற்றல் சேவையினை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திக்கொண்டு வரும் நிலையில், தனியாரிடமும் இந்த சேவையினை செய்வதற்கு விலைமனுக்கள் கோரி அந்த சேவையினை வழங்கியிருக்கின்றோம்.
தனியார் நிறுவனங்களும் அந்த சேவையினை செய்வதற்கு, முறைப்படி மாநகர சபையில் பதிவுகளை மேற்கொண்டு, அதன்பிரகாரம் மனிதக்கழிவகற்றல் செயற்பாடு நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போது, அண்மைக்காலமாக மிக மோசமான முறையில் நள்ளிரவுகளில் மனிதக் கழிவுகளை பொது வெளிகளிலும், கழிவு நீர் வழிந்தோடும் வாய்க்கால்களிலும், சேமக்காலைகளிலும் போட்டு, சுற்றுச் சூழல் மாசடையும் வகையில் எமது பொது மக்கள் நடந்துகொள்கின்றார்கள்.
முனிதக் கழிவகற்றல் முறைகள் யாழ்.மாநகர சபையினால் மிகச் சிறப்பாக செய்யும் நிலையில், மோசமான நிலையில், மனிதக் கழிவுகளை போடும் தனியார் நிறுவனங்கள் அகப்பட்டால் உரிய தண்டனைகள் வழங்கப்படும்.
துனியார் நிறுவனங்கள் சிறப்பாக இந்த சேவையினை செய்யத் தவறின், மாநகர சபை எல்லைக்குள் இந்த சேவையினை சிறப்பான முறையில் செயற்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம்.
வசதியின்மை காரணமாக தனியார் நிறுவனங்களிடம் மனிதக் கழிவகற்றல் சேவையினை செய்ய வழங்கும்போது, சுற்றுச் சூழல் மாசடையும் வகையில், மனிதக் கழிவுகளை பொது வெளிகளில் போடுவதற்கு அனுமதிக்க முடியாது.
பொது மக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால், மாநகரத்தினை சுற்றுச் சூழல் மாசடையாத வகையில், அழகாக பேணமுடியுமென்றும் யாழ்.மாநகர முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]