ஐ.பி.எல் தொடரின் 11வது சீசன் வரும் சித்திரை மாதம் 7ம் திகதி மும்பையில் ஆரம்பமாகிறது. தோனி தலைமையில் மீண்டும் களம் இறங்கும் சென்னை அணிக்காக முரளி விஜய் விளையாடுகிறார்.
சென்னையில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கலந்து கொண்டார் அப்போது அவர் கூறியதாவது
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் நான் இடம் பிடித்ததை நினைக்கும் போது நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் என்றே தோன்றுகிறது. மீண்டும் சிஎஸ்கே அணிக்குத் திரும்பியது எனக்குக் கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பாகும்.
அணியில் உள்ள ஒவ்வொரு வீரரும், சிறப்பாகச் செயல்பட்டு அணியை முன்னெடுத்துச் சென்றுள்ளோம். வெளிநாட்டு வீரர்களும், உள்நாட்டு வீரர்களும் ஒரே மனநிலையில் இருந்து விளையாடுவது மிகச்சிறப்பான செயலாகும். இந்த ஆண்டும் அதே விளையாட்டுத்தனத்துடன், சிறப்பான பார்முடன் அணியை வழிநடத்த முயற்சிக்கிறோம்.
சிஎஸ்கே அணியில் விளையாடுவது என்பதே மகிழ்ச்சியான தருணமாகும். அந்தவகையில் அந்த அணிக்காக கடந்த காலங்களில் சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முதல்போட்டிக்காக நான் காத்திருக்கிறேன்.
சிஎஸ்கே அணியோடு மற்ற அணிகளை ஒப்பிடுவது கடினம் . இந்த அணியில் வீரர்கள் அனைவரும் ஒருகுடும்பம் போல் பழகினோம். பிராவோ உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையாக, நெருக்கமாகப் பழகினோம். மீண்டும் அதே மகிழ்ச்சி தொடரும் என நம்புகிறேன் இவ்வாறு தெரிவித்தார்
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]