மனம் கொத்தி பறவை படத்தின் நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா??

2012 -ம் ஆண்டு சிவகார்திகேயன் கதாநாயகனாக நடித்த மனம் கொத்தி பறவை என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஆத்மீயா அதன் பின்னர் என்னவானார் என்று பலருக்கும் தெரியவில்லை.

மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு தமிழில் 2014 -ம் ஆண்டு வெளியான போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். பின்னர் 2016 -ம் ஆண்டு அமீபா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் ஷ்யாம் நடித்த காவியன் என்ற படத்திலும் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் கடந்த 2017 -ம் ஆண்டே வெளியாகி இருந்த நிலையில் இன்னும் இந்த படம் திரைக்கு வந்ததா இல்லையா என்று கூட தெரிவில்லை.

ஷாம் படத்தை தவிர்த்து நடிகை ஆத்மீயா சென்ற 2017 -ம் ஆண்டு ராஜாவும் 5 கூஜாவும் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் இதுவரை திரையில் வெளியானதா இல்லையா என்று கூட தெரியவில்லை.

இந்நிலையில் இவர், நடித்த மனம் கொத்தி பறவை படத்திற்கு பிறகு பெயர் சொல்லும் அளவிலான படங்களில் நடிக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க இவர் நடித்த படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் தான் உள்ளது போல தெரிகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]