மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திர சாமி கோவிலுக்கு ரஜினிகாந்த் திடீர் விஜயம்

மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திர சாமி கோவிலுக்கு ரஜினிகாந்த் திடீர் விஜயம்

சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நேற்று கர்நாடக-ஆந்திர எல்லையில் உள்ள மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திர சாமி கோவிலுக்கு சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து ராகவேந்திரர் சாமியை பயபக்தியுடன் வழிபட்டார்.

அங்கு சிறிது நேரம் அமைதியாக இருந்து தியானமும் செய்தார். ராகவேந்திர கோவில் மடாதிபதி சுபதேந்திர தீர்த்த சாமிகளை சந்தித்து ஆசிபெற்றார். ரஜினி காந்த் கோவிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் பக்தர்கள் அவரை காண திரண்டார்கள்.

போலீசார் பாதுகாப்பு அளித்தனர். கூட்டத்தினரை பார்த்து கையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த் ராகவேந்திரரின் தீவிர பக்தராக இருக்கிறார். தனது 100-வது படமான ராகவேந்திரர் படத்தில் ராகவேந்திரராகவே நடித்தார். மந்திராலயத்துக்கு வரும் பக்தர்களுக்காக தங்கும் இடமும் கட்டிக்கொடுத்து இருக்கிறார்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]